குஜிலியம்பாறையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

குஜிலியம்பாறை, நவ. 20: குஜிலியம்பாறையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், குஜிலியம்பாறை மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய குழு உறுப்பினர் கண்ணன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சரவணன், ஒன்றிய தலைவர் குணசேகரன், துணை செயலாளர் சண்முகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் குஜிலியம்பாறை ஒன்றியத்தில், குஜிலியம்பாறையில் மேம்படுத்தப்பட்ட அரசு சுகாதார நிலையமும், ஆர்.கோம்பை, ஆர்.வெள்ளோடு, டி.கூடலூர் ஆகிய இடங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளது. இங்கு பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் லேப் டெக்னீசியன்கள் போதிய அளவு இல்லாமல் உள்ளனர். இதனால் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

இந்நிலையில் கடந்த 19.2.2019 அன்று குஜிலியம்பாறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்பட்டது. எனவே தாலுகா தலைமையிடத்தில் உள்ள மேம்படுத்தபட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை, அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். இதனால் மருத்துவனைக்கு வந்து செல்லும் நோயாளிகளுக்கு சிரமம் இன்றி சிகிச்சை அளிக்க முடியும். எனவே குஜிலியம்பாறையில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதில் கட்டுமான சங்க மாவட்ட துணை செயலாளர் பாலசுப்பிரமணி, ஜனநாயக சங்க மாவட்ட தலைவர் விஷ்ணுவர்த்தன், மாவட்ட செயலாளர் பாலாஜி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சக்திவேல், காளிமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>