×

வேப்பம்பட்டில் நிலுவையில் கிடக்கும் ரயில்வே மேம்பால பணிகளை திமுக எம்.எல்.ஏ.ஆய்வு

திருவள்ளூர், நவ. 20: வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் ரயில்வே கேட், எண், 14 பகுதியில், கடந்த 2011ம் ஆண்டு, சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.14.60 கோடி மதிப்பில், புதிய மேம்பால பணிக்கு ஒப்பந்தம் விடப்பட்டு துவங்கியது. கடந்த 8 ஆண்டுகளாக நிறைவடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதேபோல், செவ்வாப்பேட்டை மற்றும் புட்லூர் ரயில் நிலையம்  அருகிலும் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் பல ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்துவருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து, நேற்று  பூந்தமல்லி திமுக எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை மற்றும் புட்லூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், ரயில் பயணிகளிடம் பெறப்பட்ட மனுக்களுடன், சென்னை தெற்கு ரயில்வே உயரதிகாரிகளை சந்தித்து மனுக்களை வழங்கி, மேம்பால பணிகளை விரைந்து முடிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து, மேம்பால பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது, திருவள்ளூர் தற்கு ஒன்றிய  செயலாளர் ஆர்.ஜெயசீலன், அவைத்தலைவர் த.எத்திராஜ் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்

Tags : DMK MLA ,railway ,
× RELATED திமுக எம்எல்ஏ, அதிமுக மாவட்ட செயலாளர்...