×

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கூட்டுறவு வங்கி உதவியாளர் பணியிடத்திற்கு 4,529 பேர் விண்ணப்பம்

சேலம், நவ.20: சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, கூட்டுறவு கடன் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்திற்கு 4529 பேர் விண்ணப்பித்துள்ளனர்.  தமிழகத்தில் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளும், 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும் செயல்படுகின்றன. மத்திய கூட்டுறவு வங்கிகள், மக்களிடம் இருந்து பெறும் டெபாசிட் தொகை, மாநில தலைமை கூட்டுறவு வங்கியிடம் இருந்து பெறும் கடன் ஆகியவை வாயிலாக நிதி ஆதாரத்தை பெறுகின்றன. மத்திய கூட்டுறவு வங்கியிடம் இருந்து பெறும் தொகையை வைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களும் நிதி ஆதாரத்தை ஈட்டுகின்றன. அதில், சிறுவணிக கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன், தங்கம் மீதான கடன், பயிர் கடன் என பல வகையான கடன்களை வழங்குகின்றன. இந்த மத்திய கூட்டுறவு வங்கிகளிலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் அதிக எண்ணிக்கையில் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலி பணியிடங்களை நிரப்ப கூட்டுறவுத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, அந்தந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்ககிளிலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை அந்தந்த மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு துறையின் ஆள் சேர்ப்பு நிலையத்தால் நியமிக்கப்பட உள்ளது.

சேலம் மாவட்டத்தில் 150க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளது. இதற்காக விண்ணப்பம், செப்டம்பர் 30ம்தேதி வரை பெறப்பட்டது.  அதன்படி, மத்திய கூட்டுறவு வங்கி உதவியாளர் பணியிடத்துக்கு 3,207 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், சரியான ஆவணங்கள் இல்லாத 483 விண்ணப்பங்கள் நிரகரிக்கப்பட்டது. 2,724 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது. இதேபோல், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் உதவியாளர் பணியிடத்துக்கு 2,114 பேர் விண்ணப்பித்தனர். சரியான ஆணவங்கள் இல்லாத 309 விண்ணப்பங்கள் நிரகரிக்கப்பட்ேதாடு, 1805 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது. இந்த பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் 23, 24ம் தேதிகளில் நடக்கிறது. 23ம் தேதி மத்திய கூட்டுறவு வங்கி உதவியாளர் பணியிடத்துக்கும், 24ம் தேதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் உதவியாளர் பணியிடத்துக்கும் எழுத்துத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான தேர்வு நுழைவுச்சீட்டு www.drbslm.in என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   


Tags : applicants ,Co-operative Bank ,
× RELATED பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...