×

பசுமை தாயகம் சார்பில் பிளாஸ்டிக் குப்பைக்கு அரிசி வழங்கும் திட்டம்

ஆத்தூர், நவ.20:பசுமை தாயகம் அமைப்பு, 2 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து வந்து கொடுப்போருக்கு 1 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சேலம் கிழக்கு மாவட்ட பசுமை தாயகம் சார்பில், ஆத்தூர் பழைய பஸ் நிலையம் முன் நடைபெற்ற முகாமில், மாநில துணை செயலாளர் வெங்கடாசலம் தலைமையில், பாமக மாநில துணை பொதுச்செயலாளர் குணசேகரன், நிர்வாகிகள் கொத்தாம்பாடி நடராஜன், கண்ணன் ஆகியோர், அரிசி மற்றும் காய்கறிகளை வழங்கினர். நிகழ்ச்சியில் மணிகண்டன், நாராயணன், பாண்டியன், குணசேகரன், ராஜா, செழியன், கௌசிக், கோட்டை விஜய்குமார், செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இளம்பிள்ளை: சேலம் தெற்கு மாவட்ட பசுமை தாயகம் சார்பில், இளம்பிள்ளை பேருந்து நிறுத்தம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பசுமை தாயக அமைப்பாளர் பச்சமுத்து தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட பாமக செயலாளர் அண்ணாதுரை, பொதுமக்களிடமிருந்து பெறப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ராஜா, மணி, விஜய் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Green Homeland ,
× RELATED செங்கையில் ராமதாஸ் பிறந்தநாள் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்