×

விஜய் மக்கள் இயக்க தலைவர் பார்த்திபன் பிறந்தநாள் விழா

சேலம், நவ.20: சேலம் மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் தமிழன் பார்த்திபனின் பிறந்தநாள் விழா அன்னதானம் மற்றும் உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது. சேலம் மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் தமிழன் பார்த்திபன் பிறந்தநாள் நேற்று முன்தினம்  (18ம்தேதி) கொண்டாடப்பட்டது.  இதையொட்டி அம்மாப்பேட்டையில் உள்ள விஜய் மக்கள் இயக்க விலையில்லா விருந்தகம் மற்றும் வள்ளலார் மடத்தில் இனிப்புடன் காலை உணவு வழங்கப்பட்டது. பாபா கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து, அன்னதானத்துடன் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளியில் காலை உணவு வழங்கினர். இதே போல் பொதுமக்களுக்கு நில வேம்பு கசாயமும் வழங்கப்பட்டது. மேலும் எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோயில், அயோத்தியாப்பட்டணம் ராமர் கோயில் உள்பட பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து, அன்னதானம் வழங்கப்பட்டது. விஜய் மக்கள் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உமாபதி தலைமையில் நடந்த நிகழ்ச்சிகளில்  ெகளரவ தலைவர் ஞானசேகர், மாவட்ட துணைத்தலைவர் நெத்திமேடு ராஜா, இளம்பிள்ளை செந்தில்குமார், தனசேகர், பொருளாளர் மணிகண்டன், துணைச் செயலாளர் ஆத்தூர் வெங்கடேசன், தங்கராஜ், சண்முகம், அம்மாப்பேட்டை பகுதி தலைவர் பெருமாள், தாரமங்கலம் சுதாகர், மகுடஞ்சாவடி சரவணன்,  செந்தில், ஜெயக்குமார், கொண்டலாம்பட்டி நாகராஜ், குகை பாண்டியன், ஜங்ஷன் கார்த்திக், வசந்தகுமார், இளைஞரணி கார்த்திக், ஆத்தூர் கோபி, பெரியசாமி, வீரமணி, கலங்காணி தங்கராஜ், விஜயகுமார், சுப்புரு, சம்பு, சம்பா, டைகர் சிவா உள்பட  நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags : Parthiban ,Birthday ,Vijay People's Movement ,
× RELATED அன்புமணியால்தான் பாஜவுடன் கூட்டணி: ராமதாஸ் விரக்தி