×

நஷ்டஈடு வழங்காததால் நாமக்கல்லில் அரசு பேருந்து ஜப்தி

நாமக்கல், நவ.20: நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தை அடுத்த கல்யாணி பெரியதொட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாதையன்(45). பெயிண்டர் இவர், கடந்த 13.11.2012ம் தேதி தாத்தையங்கார்பட்டி பிரிவு ரோடு அருகே மொபட்டில் சென்றார். அப்போது அவ்வழியாக சென்ற, சேலம் கோட்ட அரசு பேருந்து மோதியதில் படுகாயமடைந்தார். அதைத்தொடர்ந்து, நஷ்டஈடு கேட்டு நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த, நீதிமன்றம் கடந்த 2014ம் ஆண்டு, சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் ₹1.94 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது.  ஆனால், போக்குவரத்துக்கழகம் நஷ்டஈட்டை அளிக்கவில்லை. இதையடுத்து, மாதையன் நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த, நீதிபதி லதா சேலம் கோட்ட அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி, நேற்று கோர்ட்டு அமீனாக்கள் நாமக்கல் பேருந்து நிலையத்திற்கு சென்றனர். பின்னர், அங்கு நிறுத்தப்பட்டிருந்த சேலம் கோட்ட அரசு பேருந்தை அதிரடியாக ஜப்தி செய்தனர். இந்த சம்பவத்தால் பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Namakkal ,
× RELATED வேளாண் சட்டங்களை திரும்பபெற...