×

கராத்தே போட்டியில் புதன்சந்தை  சக்தி பள்ளி மாணவர்கள் சாதனை

சேந்தமங்கலம், நவ.20: புதன்சந்தையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சோட்டாகான் கராத்தே போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாடு சோட்டாகான் கராத்தே அகாடமி சார்பில், புதன்சந்தை ஸ்ரீ சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கராத்தே பட்டய தேர்வு நடைப்பெற்றது. இதில் இப்பள்ளியில் படிக்கும் 77 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இத்தேர்வை அகாடமி தலைமை பயிற்சியாளர் சரவணன் நடத்தினார். இதில், 37 மாணவர்கள் பட்டய தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தலைவர் மணி வெங்கடாஜலம், செயலாளர் துரைசாமி, தாளாளர் ராஜீ ஆகியோர் மஞ்சள் பெல்ட் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் செல்வராஜ், பயிற்சியாளர் பிரபு மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்

Tags :  Shakti School ,karate competition ,
× RELATED கலாம் பிறந்த நாள் ஓவிய போட்டி: உசிலம்பட்டி மாணவர்கள் சாதனை