×

ஆக்கிரமிப்பு எனக்கூறி ரேஷன் கடையை இடித்துவிட்டு தனியாருக்கு கடை அமைக்க அனுமதி

குன்னூர், நவ.20: நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி தனியாருக்கு  கடைகள் அமைக்க அனுமதி வழங்கிய சம்பவம் சர்ச்ைசயை ஏற்படுத்தியுள்ளது. குன்னூர் அருகே உள்ள காட்டேரி பகுதியில், பால்காரன் லைன், நஞ்சப்பச்சத்திரம், கிளண்டேல், டபுள் ரோடு, ரன்னி மேடு எஸ்டேட், போயர் காலனி ஆகிய பகுதிகளில் 1700 குடும்ப அட்டைதார்கள் பயன்பெற நகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் தேவராஜ் தலைமையில் கடந்த 2017ம் ஆண்டில்  ரேஷன்கடை கட்டப்பட்டது.  பின்பு திறக்கும் தருவாயில் இருந்தபோது ரேஷன் கடை மற்றும் தபால் நிலையம் உட்பட 14 கடைகள் ஆக்கிரமிப்பு எனக்கூறி நெடுஞ்சாலை துறையினர் சாலை விரிவாக்கத்திற்காக  3 மாதம் அவகாசம் அளித்து ஜேசிபி மூலம் இடித்து அகற்றினர். அப்போது தி.மு.க. உட்பட அனைத்து கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டன. இருந்த போதும் கடைகள் முழுவதுமாக இடிக்கப்பட்டது.

 தற்போது தடுப்பு சுவரை மட்டும் கட்டிவிட்டு சாலை விரிவாக்கம் செய்யாமல் நெடுஞ்சாலைதுறைக்குட்பட்ட இடம் என்று அடிக்கல் வைக்கப்பட்டுள்ளது. இந்த அடிக்கல்லை பழைய துணி மற்றும் சாக்குகள் கொண்டு மூடி மறைத்து அந்த  பகுதியில் தனியார் தேனீர் கடை பிரமாண்டமாக கட்ட அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரேஷன் கடை மற்றும் நிழற்குடை ஆகியவை கட்ட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது தனியாருக்கு கடை அமைக்க அனுமதி வழங்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags : ration shop ,shop ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி