×

வாழையில் அமோக விளைச்சல் கண்ட கேஐடி மாணவர்கள்

கோவை, நவ.20: கலைஞர் கருணாநிதி பொறியியல் கல்லுாரியில் வேளாண்மை துறையில் பயிலும் வேளாண் மாணவர்கள் வாழையில் அமோக விளைச்சலை எடுத்துள்ளனர். இது குறித்து கலைஞர் கருணாநிதி பொறியியல் கல்லுாரியில் வேளாண்மை துறையினர் கூறுகையில், வாழை ரகங்களான நேந்திரன், மொந்தன், செவ்வாழை, கதளி போன்ற இரகங்களை அரை ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்து அதிக அளவில் மகசூல் எடுத்துள்ளனர். மேலும் வாழையில் வெங்காயம் மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றை ஊடுபயிராக பயிரிட்டனர். உழுதல் முதல் அறுவடை வரை அனைத்து வேலைகளையும் மாணவர்களே செய்தனர். வெவ்வேறு வகையான அளவில் நீரை செலுத்தும் வகையில் வாழையில் சொட்டுநீர் பாசனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மண் ஈரப்பதம் மற்றும் நீராவியாதலைப் பொருத்து சொட்டுநீர் பாய்ச்சினர். மண்ணை ஆராய்ந்து பயிருக்கேற்ற உரத்தை சரியான அளவில் கொடுக்கப்பட்டுள்ளது. இயற்கை உரங்களாகிய தொழு உரம் மற்றும் மண்புழு உரம் 80 சதவீதமும் இயற்கை உரங்கள் 20 சதவீதமும் உபயோகிக்கப்பட்டது.வாழையின் வயதைப் பொருத்து நாள் ஒன்றுக்கு 6 லிட்டரில் இருந்து 18 லிட்டர் வரை சொட்டுநீர் பாசனம் கொடுக்கப்பட்டது. இதன் மூலமாக தண்ணிர் தேவை 40 சதவீதம் வரையிலும், உரத் தேவை 40 சதவீதம் மற்றும் ஆட்கள் கூலி 70 சதவீதம் வரையிலும் சேமித்து உள்ளனர். நேந்திரன் வாழையில் ஒரு மரம் ஒன்றுக்கு 12 கிலோ எடையும் மற்றும் இதர ரகங்களின் வாழைத்தார் எடை 60 முதல் 65 கிலோ வரை சாகுபடி செய்து அமோக மகசூல் எடுத்துள்ளனர். வாழையில் மற்றும் வாழை ஊடுபயிரில் விவசாயிகளைக் காட்டிலும் இருமடங்கு வருமானமாக கிடைத்துள்ளது என்றனர்.

Tags : KIT students ,
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு