பட்டா வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

கோவை, நவ.20:  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பட்டா வழங்க கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காந்திநகர், பாரதிபவன் ரோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கோவை கலெக்டர் அலுவலகம் வந்தனர். பின்னர் அவர்கள் பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பொதுமக்கள் முற்றுகையிட்டதை அறிந்த மாவட்ட கலெக்டர் ராஜாமணி தனது அறையில் இருந்து கீழே இறங்கி வந்து முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.பின்னர் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்து விட்டு அங்கு இருந்து கலைந்து சென்றனர். இதனால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>