மதுக்கரையில் குடிநீர் குழாய் உடைப்பு

ேகாவை, நவ.20: கோவை மதுக்கரை பேரூராட்சி பகுதிகளுக்கு சப்ளையாகும் பிரதான குடிநீர் குழாய் காந்திநகர் பகுதியில் நேற்று முன்தினம் உடைந்தது. குடிநீர் வீணாகியதை தொடர்ந்து சப்ளை நிறுத்தப்பட்டது. குழாய் குழாய் சீரமைப்பு பணி நடத்தப்பட்ட பின்னர், பல மணி நேரம் கடந்து குடிநீர் வினியோகிக்கப்பட்டது. பிரதான குடிநீர் குழாயில், பாலக்காடு மெயின் ரோடு மைல்கல், காந்திநகர், சர்ச் காலனி பகுதியில் அடிக்கடி உடைப்பு, நீர் கசிவு ஏற்படுகிறது. இதனால் மதுக்கரை மரப்பாலம் உள்ளிட்ட 18 வார்டுகளுக்கு குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டு வருகிறது. பழுதான குழாயை மாற்றவேண்டும். நீர் கசிவை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>