×

கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு 3690 வாக்குச்சாவடி

கோவை, நவ. 20:  கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக 3690 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில் 13 ஆயிரம் அரசு அலுவலர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக என மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மாவட்ட வாரியாக தேர்தல் அலுவலர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக முன் ஏற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக கடந்த அக்டோபர் மாதம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் கோவை  மாவட்டத்தில் ஆண் 15 லட்சத்து  32 ஆயிரத்து 564, பெண் 15 லட்சத்து 66  ஆயிரத்து 493 , மூன்றாம் பாலினம் 365 என மொத்தம்  30 லட்சத்து 99 ஆயிரத்து  422 வாக்காளர்கள் உள்ளனர் என மாவட்ட கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர், கோவை வடக்கு, கோவை தெற்கு, கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், வால்பாறை, பொள்ளாச்சி, கிணத்துகடவு, சூலூர் என 10 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 3690 வாக்குச்சாவடிகள் உள்ளாட்சி தேர்தலுக்காக அமைக்கப்பட உள்ளன. இதில் 13 ஆயிரம் அரசு அலுவலர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இது குறித்து மாவட்ட உள்ளாட்சி பிரிவு தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘வாக்குச்சாவடிக்கு 4 பேர் வீதம் மற்றும் பறக்கும் படையினர் என சுமார் 13 ஆயிரம் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இதற்காக பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது’’ என்றார்.

Tags : polling booths ,Coimbatore district ,
× RELATED 1,168 வாக்கு சாவடிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்