×

நாகலாபுரத்தில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்

நெல்லை, நவ. 20: நாகலாபுரத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நடந்தது. நாகலாபுரம்  தியாகி இம்மானுவேல் சேகரர் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம், நாகலாபுரம் ஆரம்ப  சுகாதார நிலைய சித்த பிரிவு சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்  நடந்தது. நாகலாபுரம் காவல் நிலைய ஏட்டு நாராயணன் தலைமை வகித்தார். டாக்டர்  விஜயலதா முன்னிலை வகித்தார். சங்கத்தலைவர் செண்பகக்கனி, செயலாளர்  ஜெயமுருகன், பொருளாளர் முத்துப்பாண்டி, துணைத்தலைவர் கண்ணன், துணைச்  செயலாளர் ஜெயக்குமார், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பாலமுருகன், குருநாதன்,  உமாநாத், மாரியப்பன், வேலுச்சாமி, மற்றும் சங்க உறுப்பினர்கள்  பங்கேற்றனர். பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

   கோவில்பட்டி: கோவில்பட்டியில் உலக தமிழ் ஆய்வு சங்கம் சார்பில் மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நடந்தது. கோவில்பட்டி தெற்கு பஜாரில் நடந்த இம்முகாமிற்கு ராஜகோபால் தலைமை வகித்தார். உலக தமிழ் ஆய்வு சங்க ஒருங்கிணைப்பாளர் நாசில்குமார் முன்னிலை வகித்தார். முகாமை டாக்டர் திருமுருகன் துவக்கிவைத்து வைத்து மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார். முகாமில் சங்க ஆலோசகர் குருசெல்லப்பா, தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம்  தொகுதி தலைவர்கள் பழனிகுமார், செல்வராஜ், அனிட்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  ஏற்பாடுகளை சங்கத்தின் கோவில்பட்ட  தொகுதி தலைவர் விக்னேஷ்ராஜா செய்திருந்தார்.



Tags : drinking water camp ,Nagalapuram ,
× RELATED சாலையின் நடுவே இருந்த பேரிகார்டு மீது...