தூத்துக்குடி மாவட்டத்தில் இந்திரா காந்தி பிறந்தநாள் விழா

தூத்துக்குடி, நவ. 20: தூத்துக்குடியில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாள் காங்கிரஸ் சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாநகர்  மாவட்ட காங்கிரஸ் சார்பில், கடற்கரை சாலையில் உள்ள இந்திரா காந்தி சிலைக்கு மாவட்டத் தலைவர் சி.எஸ்.முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் வர்த்தக காங்கிரஸ் மாவட்டத் தலைவர் டேவிட் பிரபாகர், மண்டல தலைவர்கள் ஜசன்சில்வா, தங்கராஜ், வர்த்தக காங்கிரஸ் நகரத் தலைவர் அருள்வளன், மாவட்ட துணைத்தலைவர் பிரபாகரன், ஊடக பிரிவு மாவட்டத் தலைவர் முத்துமணி, ஓ.பி.சி. பிரிவு மாநகர்  மாவட்டத் தலைவர் பிராங்கிளின் ஜோஸ், மாவட்ட பொதுச்செயலாளர் சாமுவேல்ஞானதுரை, எடிசன், மாவட்டச் செயலாளர்கள் கோபால், ஜெயராஜ், வார்டு தலைவர்கள் மகாலிங்கம், ராஜா, சுரேஷ்மாடன்,ஒ.பி.சி.பிரிவு மாவட்ட பொதுச்செயலாளர் பிரவீன்ஸ்டர் சண்முகசுந்தரம், மாவட்ட விவசாயிகள் பிரிவு தலைவர் பாலசுப்பிரமணியம், மாவட்ட பட்டதாரி பிரிவு தலைவர் மோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

  ஏரல்:   இதே போல் ஏரல் நகர காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தி  பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி காந்திசிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு நகரத் தலைவர் பாக்கர் அலி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விழாவுக்கு  வைகுண்டம்  வட்டார முன்னாள் தலைவர் குணமால், மதார் மீரான்  முன்னிலை வகித்தனர்.  கெங்கமுத்து பொதுமக்களுக்கு லட்டு வழங்கினார். இதில்  அய்யம்பெருமாள், பிஸ்மிசுல்தான், சகாயம், ராஜேந்திரன், ஆதிலிங்கம் உள்ளிட்ட  பலர் பங்கேற்றனர்.   உடன்குடி: உடன்குடி வட்டார. நகர காங்கிரஸ் சார்பில் இந்திராகாந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தலைமை வகித்த வட்டாரத் தலைவர் துரைராஜ் ஜோசப்,  இந்திரா காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட பொருளாளர் நடராஜன் முன்னிலை வகித்தார். மாநில பொதுக்குழுஉறுப்பினர் சிவசுப்பிரமணியன் இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் ஆதி லிங்கம், மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் அன்புராணி, வட்டார துணைத்தலைவர் ரகுமத்துல்லா, பிரபாகர், கோபால், மகாராஜா, லிங்கவாசகம், செல்டன், ராமமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

  சாத்தான்குளம்:  இதே போல் சாத்தான்குளம் அருகே கொழுந்தட்டில் தெற்கு மாவட்ட ராஜிவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கத்தின் சார்பில் நடந்த இந்திரா காந்தி பிறந்த நாள் . விழாவுக்கு தெற்கு மாவட்டத் தலைவர் லூர்துமணி தலைமை வகித்தார்.    வைகுண்டம்  தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் வர்கீஸ் முன்னிலை வகித்தார். இதையடுத்து இந்திரா காந்தி படத்திற்கு மாலை அணிவித்த நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் கொழுந்தட்டுகிராம கமிட்டி தலைவர் பாக்கியம், மகிளா காங்கிரசை சேர்ந்த புனிதா, குளோரி,முன்னாள் மகிளா காங்கிரஸ் தலைவி வசுமதி, கிழக்கு வட்டார மகிளா காங்கிரஸ் தலைவி பரணிதேவி மற்றும் சித்திரை, சவரிமுத்து. மேரி பங்கேற்றனர்.

Related Stories:

>