×

ராதாபுரத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள்

நெல்லை, நவ. 20: ராதா
புரம் ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம். ஒன்றிய பொறுப்பாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் தலைமையில் நடந்தது. தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜோசப் பெல்சி முன்னிலை வகித்தார். ராதாபுரம் ஊராட்சி செயலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார்.கூட்டத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிக்கான வியூகம் குறித்தும், வளர்ச்சிப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் ஒன்றிய துணை செயலாளர்கள் வேணுகோபால், நாராயணன், பரிமளம், மாவட்ட பிரதிநிதிகள் நவநீதன், ராஜன், வேலப்பன், ஊராட்சி செயலாளர்கள் (தெற்கு கள்ளிகுளம்) சார்லஸ் பெஸ்கி, (சமூகரெங்கபுரம்) முரளி, (கும்பிகுளம்) ரமேஷ், (கஸ்தூரிரெங்கபுரம்) மாசானம், (உறுமன்குளம்) அமெச்சியார், (கூடங்குளம்) பாலசுப்பிரமணியன், (விஜயாபதி) இளங்கோ, (கூத்தன்குழி) ராஜா, (உவரி) புலவர் சேசையா, (க.புதூர்) ஜான்கருத்தையா, (திருவம்பலபுரம்) மாசானம் (எ) மணி, மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஜெனிபர் தினகர், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் எரிக்ஜீட், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் முருகன், மாவட்ட விவசாய தொழிலாளரணி துணை அமைப்பாளர் கண்ணன், மாவட்ட பொறியாளரணி துணை அமைப்பாளர் ஆனந்த், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் சுப்பையா, மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர்கள் சூசை அந்தோணி, ஜான்சன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் மூர்த்தி, மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர்கள் சரோஜா, முத்துத்துரை, அல்போன்ஸ், செங்குட்டுவன், அந்தோணி, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் செழியன், செல்வி, நடராஜன், ராமையா, டேவிட், அகஸ்டின், கணேசன், கிறிஸ்டோபர், சந்திரசேகர், சுபாஷ், திசையன்விளை முன்னாள் பேரூர் செயலாளர் ஜெயராஜ், நசுருதின், ரமேஷ், கண்ணன், நெல்சன், ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் ஜெய்சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அயராது பாடுபட்டு அனைத்து தொகுதிகளிலும் வெற்றியை தேடி தந்த தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், நெல்லை எம்பி தொகுதியில் 35 ஆயிரம் வாக்குகள் அதிகமாக அளித்த ராதாபுரம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் ராதாபுரம் ஒன்றிய பகுதியில் உள்ள 2 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 18 ஒன்றிய குழு வார்டுகள், 27 கிராம ஊராட்சி தலைவர்கள், திசையன்விளை பேரூராட்சி தலைவர், பேரூராட்சியின் 18 வார்டு உறுப்பினர்கள் அனைத்திலும் திமுக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு அயராது உழைத்திட தீர்மானிக்கப்பட்டது.ராதாபுரம் ஒன்றிய பகுதியில் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள வள்ளியூர் -இட்டமொழி ரோடு, மிட்டதார்குளம் ஊருக்குள் செல்லும் சாலை, கஸ்தூரிரெங்கபுரம்- முடவன்குளம் ரோடு, சமூகரெங்கபுரம்-சிங்காரத்தோப்பு ரோடு, ராதாபுரம்-ஆத்தங்கரை பள்ளிவாசல் ரோடு ஆகியவற்றை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. ராதாபுரம் ஒன்றியப் பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் தடையின்றி வழங்க வேண்டுமென தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கும், தமிழக அரசுக்கும் வலியுறுத்தப்பட்டது.தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளில் திமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை திமுக ஒன்றிய பொறுப்பாளர் விஎஸ்ஆர்.ெஜகதீஷ் வழங்கினார்.

Tags : activists ,DMK ,
× RELATED 4 ஆண்டுகள் பழனிசாமி ஆட்சி தொடர...