×

ஏர்வாடி அருகே ஆலங்குளத்தில் அடிப்படை வசதியின்றி அவதிக்குள்ளாகும் மக்கள்

ஏர்வாடி, நவ. 20: ஏர்வாடி அருகே ஆலங்குளத்தில் 1500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமம், புலியூர் குறிச்சி கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்டது. இங்குள்ள  தெருக்கள், மண் சாலைகளே உள்ளன.  வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வாறுகால் வசதியில்லாததால், குட்டைப்போல் ஆங்காங்கே தேங்கி நிற்கின்றன. இதனால் கொசுக்கள் பெருகி காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. இதுகுறித்து புலியூர்குறிச்சி ஊராட்சி திமுக செயலாளர் ஜான்பால், சமக களக்காடு ஒன்றிய செயலாளர் ஜெபஸ்டின்  திரவியராஜ் ஆகியோர் கூறியதாவது: புலியூர்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட  இனாம் ஆலங்குளம்  தெற்குத்தெருவில் சாலை  வசதி இல்லை. மழைநீர் மற்றும் கழிவுநீர்  தெருக்களில் குளம்போல் தேங்கி நிற்கிறது. விஷச் செடிகளும் காடுகள்போல  வளர்ந்து காணப்படுகிறது. கடந்த 2 மாதங்களில் 5 பாம்புகள் மற்றும் தேள்கள் அடிக்கப்பட்டுள்ளன. இங்கு  கழிவுநீர் குளம்போல் தேங்குவதால் கொசுக்களின் உற்பத்தி கேந்திரமாக மாறிவிட்டன. அடிப்படை வசதிகள் கேட்டு ஊராட்சியில் மனு  கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம், இந்த பகுதியை பார்வையிட்டு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும், என்றனர்.


Tags : facilities ,Airwadi ,Alangulam ,
× RELATED ஏர்வாடி அருகே காரில் கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல்