×

திருப்பத்தூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து மாணவர்கள் உட்பட 8 பேர் காயம்

திருப்பத்தூர், நவ.20: திருப்பத்தூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேர் காயமடைந்தனர்.திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலை புதூர்நாடு பகுதியிலிருந்து நேற்று மாலை அரசு வனத்துறை மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் மலை கிராம பொதுமக்கள் ஷேர் ஆட்டோவில் தகரகுப்பம் கிராமத்திற்கு சென்றனர்.அப்போது ஆட்டோ டிரைவர் மாணிக்கம் என்பவர் தகரகுப்பம் வளைவில் பிரேக் போட்டுள்ளார். இதில் ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த பள்ளி மாணவ, மாணவிகள் 5 பேர், பொதுமக்கள் 3 பேர் என மொத்தம் 8 பேர் பலத்த காயமடைந்தனர்.

அவர்களை, அக்கம் பக்கத்தினர் மீட்டு புதூர்நாடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் இரண்டு மாணவர்களுக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : auto crash ,Tirupattur ,
× RELATED விவசாயிகள், மக்களுக்கு உதவி செய்ய தயார் நிலையில் இருக்க வேண்டும்