அரக்கோணம் அருகே ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் வீட்டில் 12 சவரன் நகை திருட்டு

அரக்கோணம், நவ.20:அரக்கோணம் அருகே ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் வீட்டில் 12 சவரன் நகையை மர்ம ஆசாமிகள் திருடி சென்றுள்ளனர்.அரக்கோணம் அடுத்த பாலகிருஷ்ணாபுரம்- புதூர் பகுதியைச் சேர்ந்வர் கோவிந்தன்(65), ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர். இவர் குடும்பத்தினருடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருத்தணியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு நேற்றிரவு மீண்டும் வீட்டிற்கு வந்தார்.வீட்டின் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடைந்தது. மேலும் பீரோவில் வைத்திருந்த 12 சவரன் நகையை மர்ம ஆசாமிகள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த அரக்கோணம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் வீட்டில் உள்ள ஜன்னல் உடைத்து மர்ம ஆசாமிகள் நகையை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிபு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Related Stories:

>