×

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் அரசியல் கட்சிகள்

புதுக்கோட்டை, நவ. 19: புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசியல் கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வருவதால் அனைத்து கட்சிகளின் மாவட்ட அலுவலகத்தில் கட்சியினர் வருகை அதிகரித்து காணப்படுகிறது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருந்து வருகிறது. இதனால் சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியானனையடுத்து அனைத்து கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலுக்கு தயராகி வருகிறது. குறிப்பாக திமுக, அதிமுக உள்ளிட்ட தமிழகத்தின் உள்ள இரண்டு பெரிய கட்சிகள் தற்போது உள்ளாட்சி தேர்தல் பணிகளில் மும்முரமாக இறங்கி பணியாற்றி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் கடந்த சில நாட்களாக கட்சியினரிடம் விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது.  இதில் ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், பேரூர்கழக நிர்வாகிகள் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் அவர்கள் சார்ந்திருக்கும் பகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ள பதவிகளில் போட்டியிட அதற்கான தொகையை செலுத்தி விருப்ப மனு செலுத்தி வருகின்றனர். இதனால் புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் வழக்கத்தைவிட திமுக நிர்வாகிகள் வருகை அதிகரித்துள்ளது.

இதபோல் புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அந்த கட்சியை சார்ந்தவர்கள் விருப்ப மனு வழங்கி வருகின்றனர்.  இதேபோல் மற்ற கட்சியினரும் விருப்ப மனுக்கள் அந்தெந்த கட்சி நிர்வாகிகள் அந்தெந்த கட்சி அலுவலகத்தில் மனு செலுத்தி வருகின்றனர். இதேபோல் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தங்களின் கூட்டணி கட்சி நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை செய்து இடங்களை வழங்க முன்வந்துள்ளனர். இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் மாவட்ட அலுவலகங்களில் அந்தந்த கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் காலை முதல் மாலை வரை கழக நிர்வாகிகளை சந்தித்து மனுக்களை பெற்றும் எப்படி பணியாற்ற வேண்டும் என்பதையும் ஆலோசனைகளாக வழங்கி வருகின்றனர்.
இதுகுறித்து விருப்ப மனு செலுத்திய கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:

விருப்ப மனு அளிக்கலாம் என்று கட்சியின் மேலடம் சொன்ன பிறகு ஆர்வமாக விருப்ப மனு செலுத்தி வருகிறோம். குறிப்பாக ஒன்றிய கவுன்சிலர், நகராட்சி வார்டு கவுன்சிலர், பேரூராட்சி வார்டு கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய பொறுப்புகளுக்கு அதிகம் பேர் விருப்ப மனு செலுத்தி வருகிறோம். விருப்ப மனு பெற்ற பிறகு மாட்ட நிர்வாகிகள் கலந்து ஆலோசனை செய்து அவர்கள் சீட் ஒதுக்குவார்கள். சீட் கிடைக்கவில்லை என்றாலும் கட்சி சார்பில் யார்க்கு சீட் வழங்கப்படுகிறதோ அவரை வெற்றி பெற பாடுபடுவோம் என்றனர்.

Tags : Parties ,Pudukkottai District ,
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...