×

செய்யும் தொழிலில் நேர்மை, உண்மையான உழைப்பு மட்டுமே வெற்றிக்கு வழிவகுக்கும்

அரியலூர், நவ. 19: செய்யும் தொழிலில் நேர்மை, உண்மையான உழைப்பு மட்டுமே வெற்றிக்கு வழிவகுக்கும் என்று அரியலூரில் நடந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாமில் கலெக்டர் ரத்னா பேசினார். அரியலூர் கலெக்டர் அலுவல கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையம் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாம் நடந்தது. தொழில் முனைவோர்களுக்கு வங்கி கடனுதவி காசோலையை வழங்கி கலெக்டர் ரத்னா பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் சுய தொழில் தொடங்கும் நபர்கள், தங்களது உற்பத்தி பொருட்களின் தரத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். தரமான பொருட்களை உற்பத்தி செய்து சரியான முறையில் சந்தைப்படுத்துவதன் மூலம் அதிக லாபம் பெறலாம். செய்யும் தொழிலில் நேர்மையும், உண்மையான உழைப்பும் மட்டுமே வெற்றிக்கு வழிவகுக்கும். அரியலூர் மாவட்டம் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த மாவட்டமாக உள்ளதால் வேளாண் பொருட்களுக்கு மதிப்பு கூட்டும் சுயதொழில் தொடங்க முன்வர வேண்டும். மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெறுவதற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் சமர்ப்பித்து பயன்பெறலாம். கூடுதல் விபரங்கள் பெற பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், வாலாஜாநகரம், அரியலூரை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

முகாமில் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விளக்கக்காட்சி மற்றும் திட்ட விளக்கங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் செயல்படுத்தபடும் திட்டங்களில் வங்கியின் பங்கு மற்றும் வங்கியின் இதர சேவைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பின்னர் ஸ்டேட் வங்கி பொன்பரப்பி கிளை சார்பில் 7 பேருக்கு ரூ.7 லட்சம் கடனுதவிக்கான வங்கி வரைவோலை மற்றும் கனரா வங்கி திருமழப்பாடி கிளை சார்பில் 8 பேருக்கு ரூ.6.50 லட்சம் கடனுதவிக்கான வங்கி வரைவோலை வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர், உதவி திட்ட அலுவலர், மகளிர் திட்டம், பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளை மேலாளர், ஊரக சுயதொழில் வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் நிறுவன பயிற்சியாளர்கள், 160 தொழில் முனைவோர் பங்கேற்றனர்.

Tags : labor ,
× RELATED மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...