தோப்பநாயகம்- ஊரணிபுரம் சாலை குண்டும், குழியுமாக மாறிய அவலம்

ஒரத்தநாடு, நவ. 19: ஒரத்தநாடு அருகே கல்லணை கால்வாய் கரையில் செல்லும் தோப்பநாயகம்- ஊரணிபுரம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிப்பதால் தினம்தோறும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சாலையை விரைந்து சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.ஒரத்தநாடு தாலுகாவை சேர்ந்த திருவோணம் ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள தோப்பநாயகம் கிராமத்தில் இருந்து ஊரணிபுரத்துக்கு செல்லும் சாலை கல்லணை கால்வாய் கரையில் செல்கிறது. இச்சாலையில் தினசரி தஞ்சை, பட்டுக்கோட்டைக்கு ஆயிரக்கணக்கானோர் வாகனங்களில் சென்று வருகின்றனர்.இந்த சாலை சேமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் சேறும் சகதியாக மாறி விடுகிறது. இந்த சாலையில் வாகனங்களில் செல்பவர்கள் கல்லணை கால்வாய் ஆற்றுக்குள் தவறி விழும் நிலை ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தினம்தோறும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இந்த சாலையை அதிகாரிகள் ஆய்வு செய்து விரைந்து சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: