×

இறந்த வில்லன் நடிகர் ரிச பாவாவுக்கு கொரோனா: அஞ்சலி நிகழ்ச்சி ரத்து

திருவனந்தபுரம்: பிரபல மலையாள வில்லன் நடிகர் ரிச பாவா (60). 120க்கும் மேற்பட்ட மலையாள படங்கள், ஏராளமான டிவி தொடர்களில் நடித்து உள்ளார். தமிழில் காசு, தென்றல் வரும் தெரு உள்பட சில படங்களில் நடித்துள்ளார். பல வருடங்களாக நடிகர் ரிச பாவா நீரழிவு நோய் மற்றும் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலம் மோசமானதை தொடர்ந்து கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று மாலை சிகிச்சை பலனின்றி ரிச பாவா மரணமடைந்தார். அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வீட்டில் வைக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால் மரணத்துக்கு பிறகு நடந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பொது மக்கள் அஞ்சலி நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இன்று காலை 10.30 மணியளவில் கொச்சியில் உள்ள பள்ளி வாசல் மயானத்தில் கொரோனா நிபந்தனைகளுக்கு உள்பட்டு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது….

The post இறந்த வில்லன் நடிகர் ரிச பாவாவுக்கு கொரோனா: அஞ்சலி நிகழ்ச்சி ரத்து appeared first on Dinakaran.

Tags : Riza Bava ,Thiruvananthapuram ,Risa Bawa ,Riza Pawa ,
× RELATED மது விருந்தில் ரெய்டு; ரவுடி வீட்டின்...