×

உதயநிதிஸ்டாலின் நற்பணிமன்றம் சார்பில் செங்கோட்டையில் நிலவேம்பு குடிநீர் வழங்கல்

செங்கோட்டை,நவ.19:   செங்கோட்டை பஸ்நிலையத்தில் செங்கோட்டை அரசு சித்த மருத்துவமனை மற்றும் நகர உதயநிதி ஸ்டாலின் நற்பணிமன்றம் இணைந்து பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நடந்தது. திமுக நகர செயலாளர் எஸ்.எம்.ரஹீம் தலைமை வகித்தார்.  சித்த மருத்துவமனை டாக்டர்கலா, நகரஉதயநிதி ஸ்டாலின் நற்பணிமன்ற செயலாளர் மனோஜ் முன்னிலை வகித்தனர். திமுக வர்த்தக அணி மாநில துணை அமைப்பாளர்  அய்யாத்துரை பாண்டியன் முகாமை துவக்கி வைத்து பொதுமக்கள்,பயணிகளுக்கு   நிலவேம்பு குடிநீர் வழங்கினார். நிகழ்ச்சியில்  திமுக பொதுக்குழு உறுப்பினர் லிங்கராஜ்,கலைஞர் தமிழ்சங்கம் செயலாளர் ஆபத்துகாத்தான்,மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வக்கீல் வெங்கடேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆறுமுகசாமி,  மாவட்ட துணைசெயலாளர் பேபிரெசவுபாத்திமா, திமுக நிர்வாகிகள் பாஞ்ச் பீர், ஜோதிமணி, ஜெயராஜ், குத்தாலிங்கம், சாகுல்ஹமீது, மணிகண்டன், ராஜா, கல்யாணி,  ராக் லாண்ட், உள்பட நிர்வாகிகள்  பலர் கலந்து கொண்டனர்

Tags : Red Fort ,Udayanidhistal Charitable Council ,
× RELATED குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு