×

கடையநல்லூர் பள்ளியில் இயற்கை மருத்துவ தினவிழா

கடையநல்லூர்,நவ.19:  கடையநல்லூர் பெஸ்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் எஸ்.கே.டி. இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை, தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை இயற்கை யோகா பிரிவு மற்றும் புனே தேசிய இயற்கை மருத்துவ மையம் இணைந்து இரண்டாவது இயற்கை மருத்துவ தின விழா நடந்தது. பள்ளி தாளாளர் முகம்மது யூசுப் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக டாக்டர்கள் சவுந்திரபாண்டியன், மேனகா,  ஆனந்தி,  ஜெபஸ் பாண்டியன்,  கீர்த்தனா, நிஷா ஆகியோர் கலந்துகொண்டு மாணவ மாணவியர்களுக்கு இயற்கை மருத்துவத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினர். மேலும் குழந்தைகளுக்கு இயற்கை உணவு மற்றும் மருத்துவ ஆலோசனைகளும் சிறுதானிய உணவு கண்காட்சி மற்றும் போட்டிகளும் நடத்தப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் ரெஜினா மேரி, துணை முதல்வர் ரதி,  பள்ளி மருத்துவர் டாக்டர் ஜெனிபா ஆகியோர் செய்திருந்தனர்.


Tags : Kadayanallur School ,
× RELATED கடையநல்லூர் பள்ளியில் உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா