×

அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ராஜபாளையம், நவ.19: தமிழ்நாடு பொது வினியோக ஊழியர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட மற்றும் வட்டார நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ராஜபாளையத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட அமைப்புச் செயலாளர் மாரிமுத்து அனைவரையும் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் தொந்தியப்பன், மாவட்ட தலைவர் செந்தில் வடிவேல், மாவட்ட துணைத் தலைவர் ராமச்சந்திரன், கிழக்கு மாவட்ட செயலாளர் ராமு, மாவட்ட பொருளாளர் ராமர், மாநில பிரதிநிதி ராமசாமி உள்ளிட்டோர் பேசினர். கூட்டத்தில், ‘மறைந்த நிர்வாகி கருப்பையாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், ‘மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாகிகளை நேரில் சந்தித்தல், புதிய மேற்கு மாவட்ட செயலாளர் தேர்ந்தெடுத்தல் ஆகியவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

Tags : AIADMK ,Executives Advisory Meeting ,
× RELATED பாஜகவிடம் அதிமுகவை பகிரங்கமாக அடகு வைத்துவிட்டதாக கோபண்ணா விமர்சனம்