×

விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள் காமராஜ் பொறியியல் கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி

விருதுநகர், நவ. 19: விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லூரியில் உள்ள மின்னியல் துறை சார்பில், தொழில்நுட்ப பயிற்றுனர்களுக்கான இரண்டு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. மின்னியல் துறை தலைவர் கல்யாணி வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஆனந்த் ஆச்சாரி நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார்.

முதல்வர் பேசுகையில், ‘இப்பயிற்சி தொழில்நுட்ப பயிற்றுனர்களின் திறன் மேம்பாட்டிகு பெரிதும் உதவும்’ என்றார். மேலும், திறன்மிக்க வல்லுநர்களின் அடிப்படை பாதுகாப்பு, நவீன கருவிகள் மற்றும் உபகரணங்கள், மன அழுத்த மேலாண்மை, உடல்நலம் மற்றும் சுகாதாரம் ஆகியவை குறித்து தெளிவுபடுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பல தொழிநுட்ப கல்லூரிகளின் தொழில்நுட்ப பயிற்றுனர்கள் பங்கேற்றனர். கல்லூரி செயலாளர் முருகன், பொருளாளர் பெரியசாமி தொழில்நுட்ப பயிற்றுனர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினர். நிகழ்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள் ஹரிபிரசாத், கார்த்திகேயன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Kamaraj Engineering College ,
× RELATED காமராஜ் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான இறகு பந்து போட்டி