பெண்ணின் பூக்கடையை சூறையாடிய கும்பல்

திருப்புத்தூர், நவ.19:  திருப்புத்தூர் அண்ணாசிலை அருகே கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சாந்தா(55) என்பவர் பூக்கடை நடத்தி வருகிறார்.  இவருக்கும் அருகில் ஓட்டல் தொழில் செய்து வரும் செல்வம் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு 5 பேர் கொண்ட கும்பல் பூக்கடையை உடைத்து பொருட்களை ரோட்டில் வீசியுள்ளனர். இதுகுறித்து சாந்தாவின் உறவினர் கண்ணன் திருப்புத்தூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். இதனையடுத்து எஸ்.ஐ முத்துக்கிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தார். இதில் கருப்பையா மகன் செல்வம்(35) மற்றும் 4 பேர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இவர்கள் 5 பேர் மீதும் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். செல்வத்தை கைது செய்தார். தலைமறைவாக உள்ள 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.  

Related Stories:

>