×

டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தல்

சிவகங்கை, நவ.19:  சிங்கம்புணரி அருகே எஸ்.புதூரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கலெக்டர் ஜெயகாந்தனிடம் மனு அளிக்கப்பட்டது. மனுவில் கூறியிருப்பதாவது: எஸ்.புதூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே டாஸ்மாக கடை செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் ரேசன் கடை, கோவில், குடியிருப்பு பகுதிகள் உள்ளன.

அதிகப்படியான மக்கள் நடமாடும் இடமான இங்கு கடை உள்ளதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. மாலை நேரங்களில் கடை முன் திரண்டிருக்கும் கூட்டம் மற்றும் குடித்து விட்டு செல்லும் நபர்களால் இப்பகுதியில் பெண்கள், மாணவிகள் செல்ல முடியவில்லை. இவ்வழியே தான் பள்ளிகளுக்கு மாணவ, மாணவர்கள் செல்ல வேண்டும். இப்பகுதி குடியிருப்பில் வசிப்பவர்களும் அச்சத்துடன் வசிக்க வேண்டிய நிலை உள்ளது.
எனவே இக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு மதுக்கடை நடத்த அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Tags : removal ,
× RELATED ஆக்கிரமிப்புகள் அகற்றம்