×

பட்டா கேட்டு மனு

சிவகங்கை, நவ.19: காரைக்குடி டி.டி.நகர் பகுதியில் வசிக்கும் குறவர் சமூகத்தினர் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் ஜெயகாந்தனிடம் அளித்த மனுவில், ‘‘காரைக்குடி டி.டி.நகர் சர்ச் 3 மற்றும் 4வது தெருவில் குறவர் சமூகத்தை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்டோர் வீடுகள் கட்டி 80 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்த வருகிறோம். நாங்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா மற்றும் மின் இணைப்பு வழங்க வேண்டும்.

இங்கு வசிப்பவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேசன் கார்டு என அனைத்தும் உள்ளது. எங்கள் பிள்ளைகள் பள்ளியில் படித்து வருகின்றனர். ஆனால் வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லாமல் அவர்கள் வீடுகளில் படிக்க முடியாமல் கடும் பாதிப்படைந்து வருகின்றனர்’’ என்று தெரிவித்துள்ளனர். 

Tags : Patta ,
× RELATED உடனடியாக பிற்படுத்தப்பட்டோர் மக்கள்...