×

உள்ளாட்சி தேர்தலில் 5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்

சாயல்குடி, நவ. 19:  உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 5 சதவீதம் இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட காதுகேளாதவர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவிசங்கர் கூறும்போது, ‘‘தமிழ்நாட்டில் சுமார் 20 சதவீத பலதரப்பட்ட மாற்றுத்திறனாளிகள் வசித்து வருகின்றனர். பொருளாதாரம் மற்றும் சமுதாயத்தில் மிகவும் பின்தங்கியுள்ளனர். அரசு பணியில் 4 சதவீத ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. இதனால் ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட பல்வேறு உயர்பதவிகளில் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.

ஆனால் உள்ளாட்சி போன்ற மக்கள் பிரதிநிதி தேர்தலில்களில் போட்டியிட விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை. எனவே எஸ்.சி, எஸ்.டி மற்றும் பெண்களுக்கு வழங்கப்படும் முன்னுரிமை போன்று மாற்றுத்திறனாளிகளுக்கும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முன்னுரிமை வழங்க வேண்டும். 2016ல் இயற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நல சட்டப்படி வரும் உள்ளாட்சி தேர்தலில் 5 சதவீத ஒதுக்கீடு செய்ய வேண்டும்’’ என்றார். மேலும் இது குறித்து தமிழக முதல்வர், உள்ளாட்சித்துறை அமைச்சர், தலைமை தேர்தல் அலுவலர், தலைமை செயலர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பினர்.

Tags : elections ,
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...