×

தொடர் மழையால் மண்பாண்ட உற்பத்தி பாதிப்பு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

மானாமதுரை, நவ.19:  மானாமதுரை பகுதியில் கடந்த ஒன்றரை மாதங்களாக தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் மண்பாண்ட உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டு தொழிலாளர் குடும்பங்கள் கடும் நெருக்கடியை சந்திந்து வருகின்றனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மண்பாண்ட தொழிலாளர் ஷெட்டில் மழைநீர் புகுந்துள்ளது. கடந்த ஒன்றரை மாதங்களாக லட்சக்கணக்கான மதிப்புள்ள மண்பாண்ட மூலதன மண் அனைத்தும் கரைந்து வாறுகாலில் சென்று கொண்டிருக்கின்றன. தயாரித்து வைத்திருக்கும் மண்பாண்ட பொருட்களை உலர வைக்க முடியவில்லை.

இது குறித்து மண்பாண்ட தொழிலாளகள் கூறுகையில்,   மழையால் பல குடும்பங்களில் அன்றாட தேவைக்கான பணம் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். மழைக்காலங்களில் அரசு நிவாரண உதவியாக ரூ.ஆறாயிரம் வழங்கும். இரண்டு மாதங்கள் வழங்கப்படும் இந்த நிதியால் மண்பாண்ட தொழிலாளர் குடும்பங்கள் வாழ்வு பெறும். ஆனால் இந்த தொகை இதுவரை மானாமதுரையில் வழங்கப்படவில்லை. அரசு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை