வஉசி நினைவு நாள் அரசியல் கட்சியினர் மரியாதை

பரமக்குடி, நவ.19:  பரமக்குடியில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி., நினைவு நாளில் திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகளை சார்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய வ.உ.சிதம்பரனாரின் நினைவு தினத்தையொட்டி, பரமக்குடியில் அனைத்து வெள்ளார் மகாசபை சார்பாக குருபூஜை விழா நடைபெற்றது. இதில் திமுக,அதிமுக, பாஜக  உள்ளிட்ட அனைத்து கட்சியின் சார்பாக, மணிநகர் பகுதியில் உள்ள வ.உ.சி.,சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திமுக சார்பாக மாநில தீர்மானக்குழு துணைத்தலைலவர் சுப.த.திவாகரன் தலைலமையில்,மாவட்ட மாணவரணி அமைப்பாளர் துரைச்சாமி, மாவட்ட பிரதிநிதி சேதுபதி, நகர் செயலாளர் சேதுகருணாநிதி, நகர் மாணவரணி ராமதாஸ், சங்கர் உள்ளிட்ட பலர் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்தனர்.

அதிமுக சார்பாக மாவட்ட செயலாளர் முனியசாமி, பரமக்குடி எம்.எல்.ஏ. சதன்பிரபாகர் தலைமையில், நகர் செயலாளர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பரமக்குடி அனைத்து வெள்ளார் மகாசபை சார்பாக, செயல்தலைவர் கார்த்திகேயன் தலைமையில் குருசுப்பிரமணியன், துணைத்தலைவர் முத்துராமலிங்கம், செயலாளர் முனியாண்டி, பொருளாளர் பூமிநாதன் ஆகியோர் மாலை அணிவித்தனர். முன்னதாக, ஓட்டபாலத்தில் உள்ள அனைத்து வெள்ளார் மகாசபை சார்பாக 5 ஆயிரம் பேருக்கு அண்னதானம் வழங்கப்பட்டது.

Tags : Vuasi Memorial Day ,politicians ,
× RELATED வக்கீல்கள் போராட்டத்திற்கு அரசியல் கட்சியினர் ஆதரவு