×

டெங்கு விழிப்புணர்வில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம்

ஆர்.எஸ்.மங்கலம், நவ. 19:   ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தீபம் இந்தியா அறக்கட்டளை இணைந்து பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு நடந்தது. உணவே மருந்து என்று விழிப்புணர்வு நோட்டீஸ்கள்  கொடுத்து அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் பற்றிய விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. இதனை சார்பு ஆய்வாளர்  ஜெகநாதன் துவக்கி வைத்தார். இதில் அரசு போக்குவரத்து ஊழியர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பயணிகள், பொதுமக்கள் உள்பட அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

Tags : Earthquake ,public ,
× RELATED டெங்கு விழிப்புணர்வு முகாம்