×

பூப்பந்தாட்ட போட்டியில் கமுதி பள்ளி சாதனை

கமுதி, நவ.19:  கமுதி கே.என்.மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி பூப்பந்தாட்ட போட்டியில் சாதனை படைத்துள்ளது. ராமநாதபுரம் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் தொண்டியில் நடைபெற்றது. இதில் கமுதி கே.என். மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி பூப்பந்தாட்ட போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் செயலர் பாபுசெல்வக்கனி, தலைவர் மாணிக்கசஞ்சீவி, பொருளாளர் பரணிஆனந்த், தலைமையாசிரியை வசந்தா, மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.

Tags :
× RELATED பராமரிப்பு இல்லாமல் கடற்கரையோரம்...