×

பொது வார்டாக அறிவிக்க கோரி கலெக்டர் ஆபீஸ் முற்றுகை கலெக்டரிடம் தந்தை கதறல்

மதுரை, நவ. 19: மதுரை மாநகராட்சி வார்டு எண் 61ஐ பொதுவார்டாக அறிவிக்க கோரி மகபூப்பாளையம் பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  மதுரை மகபூப்பாளையம் பகுதி முன்பு 17வது வார்டு பொதுவாக இருந்தது. இந்நிலையில், மாநகராட்சி புதிய வார்டு பட்டியல் வெளியிட்டுள்ளது. அதில், வார்டு எண் 61 எனவும், இது தாழ்த்தப்பட்டோர் என மாற்றி அறிவித்துள்ளது. இந்த வார்டை மீண்டும் பொது வார்டாக மாற்ற வேண்டும் என கோரி மகப்பூபாளையம் சுன்னத்வர் ஜமாத் பள்ளி வாசல் தலைவர் நிஜாம்அலிகான் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் நேற்று மதுரை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கலெக்டர் வினய்யிடம் கொடுத்த கோரிக்கை மனுவில், ‘எங்கள் வார்டில் 15 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 10 ஆயிரம் பேர் இஸ்லாமியர்கள், 4 ஆயிரம் பேர் பிற மதத்தவர்கள். 250 பேர் மட்டுமே தாழ்த்தப்பட்டோர் உள்ளனர். அது 1.75 சதவீதம் ஆகும். எனவே இந்த வார்டை மீண்டும் பொது வார்டாக மாற்றி அறிவிக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்ற கலெக்டர், இதுபற்றி மாநகராட்சி ஆணையர் விசாரித்து நடவடிக்கை எடுக்க ஆணையருக்கு பரிந்துரை செய்தார்.

Tags : Ward ,
× RELATED திருத்துறைப்பூண்டி 17வது வார்டு...