நிலக்கோட்டையில் குழந்தைகள் உரிமைகள் விழிப்புணர்வு பேரணி

வத்தலக்குண்டு, நவ. 19: நிலக்கோட்டையில் குழந்தைகள் உரிமைகள் விழிப்புணர்வு பேரணி நடந்தது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சைல்டு வாய்ஸ்  தொண்டு நிறுவனம் சார்பாக நடந்த பேரணி துவக்க விழா நிகழ்ச்சிக்கு சைல்டு வாய்ஸ் தலைமை அறங் காவலர் அண்ணாதுரை தலைமை வகித்தார். நிலக்கோட்டை காவல்துறை சார்பு ஆய்வாளர் கண்ணாகாந்தி முன்னிலை வகித்தார். முதன்மை காவலர் தயாளன் பேரணியை துவக்கி வைத்தார்.  பெண் குழந்தைகளின் பள்ளி இடைநிற்றலை தவிர்க்கவும், கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர் ஆவதை குறைக்கவும், நிலக்கோட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கொண்டுவர வேண்டியும், பெருகி வரும்  குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டியும், பாலியல் ரீதியாக சுரண்டல் மற்றும் வன்முறைகளை நிறந்தரமாக தடுக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் கோரி பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு கோஷமிட்டு பேரணி நடத்தினர்.

இந்நிகழ்ச்சிக்கு மதுரை விடியல் குழந்தைகள் இயக்க பிரதிநிதிகள், நிலக்கோட்டை ஒன்றிய அளவிலான வளரினம் பெண்கள் குழுவின் பிரதிநிதிகள் உள்பட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். பேரணி நிலக்கோட்டை முக்கிய சாலைகள் வழியாக சென்று நிறைவடைந்தது. முடிவில் கூட்டமைப்பு தலைவி இந்திராணி கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.

Related Stories:

>