×

ஒட்டன்சத்திரத்தில் உலக சர்க்கரை நோய் தடுப்பு விழிப்புணர்வு

ஒட்டன்சத்திரம், நவ.19: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் கிளை இந்திய மருத்துவ கழகம் சார்பாக பொதுமக்களுக்கான உலக சர்க்கரை நோய் தடுப்பு விழிப்புணர்வு நடைப்போட்டி கே.ஆர்.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்திய ரெட் கிராஸ் சொசைட்டி இணைச்செயலாளர் ஹெரால்டுஜாக்சன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம் வாக்கிங் கிளப் ஒருங்கிணைப்பாளர் வேலுச்சாமி வரவேற்புரையாற்றினார்.

இந்திய மருத்துவக் கழக கிளை செயலாளர் ஆசைத்தம்பி சர்க்கரை நோய் தடுப்பு குறித்து விளக்கமளித்தார். இந்திய மருத்துவ கழக தலைவர் கருப்பண்ணன் மற்றும் துணைத் தலைவர் முத்துசாமி ஆகியோர் பொதுமக்களுக்கான நடை போட்டிகளை துவக்கி வைத்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். இதில் ஒட்டன்சத்திரம் வாக்கிங் கிளப் துணை ஒருங்கிணைப்பாளர் போஸ்தங்கராஜ், சன் செட்டில் கிளப் ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் பழனியாண்டவர் கல்லூரி வரலாற்றுத் துறை தலைவர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

Tags :
× RELATED ஒட்டன்சத்திரத்தில் தீ தடுப்பு முகாம்