×

மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் தொடர் கால்பந்து போட்டி

திண்டுக்கல், நவ.19: திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் தொடர் கால்பந்து போட்டி நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் 2019-2020க்காண தொடர் கால்பந்து போட்டிகள் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நான்காம் டிவிஷன் போட்டி நடந்தது. இதில் பீலே கால்பந்து அணிக்கும், அன்னை ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கும் நடைபெற்ற போட்டியில் 1:0 என்ற கோல் கணக்கில் பீலே அணி வெற்றி பெற்றது. இதையடுத்து நடைபெற்ற டட்லி கால்பந்து அணிக்கும், ஞானம் நினைவு கால்பந்து அணிக்கும் நடைபெற்ற போட்டியில் 5:0 என்ற கோல் கணக்கில் டட்லி அணி வெற்றி பெற்றது.

இதையடுத்து நடைபெற்ற மூன்றாம் டிவிசன் போட்டியில் கே.பி.எஸ் கால்பந்து அணிக்கும், எஸ்.எம்.பி.எம் கால்பந்து அணிக்கும் நடைபெற்ற போட்டியில் 3:2 என்ற கோல் கணக்கில் கே.பி.எஸ் அணி வெற்றி பெற்றது என திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம் தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags : Series Football Tournament ,District Football Association ,
× RELATED திமுக சார்பாக புதிய வாக்காளர் சேர்க்கும் பணி