×

திமுக ஆலோசனைக் கூட்டம்

காங்கயம்,நவ.19:காங்கயம் திமுக ஒன்றியம் சார்பில் எதிர் வரும் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோனை நடைபெற்றது. காங்கயம் திமுக வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட நத்தக்காடையூர் கரியகாளியம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்டப் பிரதிநிதி குணபாலன் தலைமை தாங்கினார். இதில் எதிர்வரும் உள்ளாட்சி தேர்தல் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதில் ஒன்றிய துணைச் செயலாளர் சரஸ்வதிசண்முகசுந்தரம், ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் செந்தில்குமார்,வார்டு கழக செயலாளர்கள், பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். காங்கயம் தெற்கு ஒன்றியம் சார்பில் செயற்குழு கூட்டம் காங்கேயம் களிமேடு ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய பொறுப்பாளர் அப்புகுட்டி முன்னிலையில் நடைபெற்றது. ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் துரைசாமி, ஒன்றிய நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Advisory Meeting ,
× RELATED கறம்பக்குடி வட்டார வேளாண் தொழில்நுட்ப ஆலோசனை கூட்டம்