மாற்றுக்கட்சியினர் 50 பேர் திமுகவில் இணைந்தனர்

தாராபுரம்.நவ.19:  திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர திமுக அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளராக போட்டியிட விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு விண்ணப்பம் வினியோகம் செய்யும் நிகழ்ச்சி தாராபுரம் திமுக நகர அலுவலகத்தில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய தேசிய லீக் கட்சியின் நிர்வாகி அபூபக்கர் சித்திக் தலைமையில் தாராபுரம் நகராட்சி ஐந்து மற்றும் ஆறாவது வார்டு பகுதிகளைச் சேர்ந்த 50 இளைஞர்கள் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

நகரச் செயலாளர் தனசேகர் புதிதாக கட்சியில் இணைந்த அனைவருக்கும் கட்சித் துண்டுகளை அணிவித்து வரவேற்றார். நிகழ்ச்சியில் அவைத்தலைவர் ராஜேந்திரன் முன்னாள் கவுன்சிலர்கள் முத்துமணி, சக்திவேல், ஸ்ரீனிவாசன், மாவட்ட பொறியாளர் அணி பாப்புக் கண்ணன்,நாசர் உசேன், அக்பர் பாஷா, துறை சந்திரசேகர், துன்பக் ஆரலி,அன்பு, முத்துமாணிக்கம், ரபீக், எஞ்சினியர் முருகானந்தம், ஆரோன், செல்வராஜ்,கமருதீன், ரவி, தாமஸ் உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories:

>