ஆட்டோ டிரைவர் தற்கொலை

காங்கயம்,நவ.19; காங்கயம் களிமேட்டில் உள்ள பங்களாப்புதூர் ரோட்டை சேந்தவர் தர்மராஜ் (37) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி  புனிதா. கருத்துவேறுபாடு காரணமாக இருவருக்கும் அடிக்கடி சண்டை வருமாம். நேற்று முன்தினமும் இதே போல இருவரும் சண்டை போட்டு கொண்டார்களாம். இதனால் மனைவி கோபித்து கொண்டு குழந்தைகளையும் தன்னுடன் அழைத்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு  சென்று விட்டார்.இதனால் மனவேதனையில் மனைவியின் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>