×

மாநகர், மாவட்டம் முழுவதும் சட்டவிரோத செயல்கள் அதிகரிப்பு

திருப்பூர், நவ.19:திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் தினமும் வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  வணி்க வளாகங்களின் முன் நிறுத்தப்பட்டுள்ள இரு சக்கர வாகனங்கள் திருட்டு, தனியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் கத்தி முனையில் பைக், செல்போன், பணம், தங்க சங்கிலி உட்பட பல்வேறு பொருட்கள் பறிப்பு, பஸ் ஸ்டாண்ட், பஸ் பயணங்களில் பயணிகளிடம் பிக்பாக்கெட் உட்பட பல்வேறு சம்பவங்கள் குறித்து திருப்பூர் வடக்கு, தெற்கு, வீரபாண்டி, அனுப்பர்பாளையம், திருமுருகன்பூண்டி, அவிநாசி, சென்ரல், நல்லூர், 15 வேலம்பாளையம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் 20க்கும் மேற்பட்ட புகார்கள் தினமும் பதிவு செய்யப்படுகிறது.  இந்த போலீஸ் ஸ்டேஷன்களில் வேலை பார்க்கும் போலீசார் வாகன தணிக்கை, டாஸ்மாக் முன் மதுபானம் விற்பனை, லாட்டரி வியாபாரிகள் கண்காணிப்பு, புகையிலை பறிமுதல், சீட்டாட்ட கிளப், சேவல்கட்டு உட்பட பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை தீவிரமாக கண்காணி–்த்து வழக்கு பதிவு செய்வதில் தீவிரம் காட்டுகின்றனர்.

திருப்பூர் மாநகர் பகுதிகளில் பணப்புழக்கம் அதிகமாக இருப்பதால் மொபைல் போன் கடைகள், ரீசார்ச் கடைகள், மதுபானக்கடைகள், மதுபான பார்கள், சீட்டாட்ட கிளப், சேவக்கட்டு, லாட்டரி விற்பனை, புகையிலை விற்பனை அதிகளவு நடக்கிறது. அமராவதி ஆற்றில் மணல் கொள்ளை நடக்கிறது. திருப்பூர் மாநகர், புறநகர் பகுதிகளில் குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர். போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : city ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து...