×

இரவு காவலர் பணியை ரத்து செய்ய வேண்டும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் சங்கம் மனு

உடுமலை, நவ. 19:உடுமலை வந்த கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் ராமசாமியிடம், கால்நடை பராமரிப்பு உதவியாளர் சங்கத்தினர் நேற்று மனு அளித்தனர். அதில், பல்லடம் கோழிநோய் நிலையத்தின் கால்நடை பராமரிப்பு உதவியாளர்களின் இரவு காவலர் பணியை ரத்து செய்ய வேண்டும், மருந்தகங்களில் பணியாற்றும் உதவியாளர்களை மாற்றுப்பணியில் அமர்த்தினால் மருந்தக பணி செய்வதில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.இதில் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் திரளாக பங்கேற்றனர். கோரிக்கை நிறைவேற்றாவிட்டால், தோழமை சங்கங்களுடன் கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

Tags : Pet Care Association Association ,
× RELATED இன்ஸ்பெக்டர் போலீஸ்காரர் ஜாமீன் மனு தள்ளுபடி