வெள்ள பாதிப்புகளை தடுக்க நொய்யல் ஆற்றில் தூர் வாரும் பணி

திருப்பூர், நவ.19: திருப்பூரில் வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில், நொய்யல் ஆற்றில் தூர்வாரும் பணி துவஙகி நடந்து வருகிறது.

வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. திருப்பூர் நகரில், மத்தியில் ஓடும் நொய்யல் ஆறு, 12 கி.மீ. தூரம் அமைந்துள்ளது. ஆற்றின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள், நேரடியாக ஆற்றுக்குள் கொட்டப்படும், குப்பைகள், இறைச்சி கழிவுகளால், நீர் வழித்தடம் மறிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆற்றில் சாக்கடை கழிவு நீர் ஓடுவதால், சீமை கருவேலன் மரங்கள், செடிகள், மரங்கள் முளைத்து, புதர் மண்டி காணப்படுகிறது.

இந்நிலையில், வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில், திருப்பூர் மாநகராட்சி சார்பில், நொய்யல் ஆற்றில் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. நேற்று, ஈஸ்வரன் கோவில் பாலம் துவங்கி, வளம் பாலம் வரை, நீர் வழித்தடத்தை மறித்து இருந்த, புதர்கள், மண் அகற்றப்பட்டு, எளிதாக நீர் வெளியேறும்

வகையில், தூர்வாரப்பட்டது. இதேபோல், மீதம் உள்ள பகுதிகளிலும், நல்லாற்றிலும், ஓடைகளிலும், தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் வழித்தடங்களில் உள்ள குப்பைகள், மண் ஆகியவற்றை இரு கரைகளிலும் ஒதுக்காமல், அனைத்தும் வாகனங்கள் மூலம் அகற்றி, வெளியேற்ற வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories:

>