வாக்காளர் விழிப்புணர்வு பயிற்றுவித்தல் குழு

கோவை, நவ. 19:  பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் முறை சாரா கல்வி பயில்வோர் மற்றும் சமுதாய பகுதிகளில் வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் பயிற்றுவித்தல் குழுக்குள் அமைக்கப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ராஜாமணி கூறியுள்ளதாவது: இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு முதன்மை தேர்தல் கமிஷனர்  வழிகாட்டுதல்களின்படி அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் முறை சாரா  கல்வி பயில்வோர் மற்றும் சமுதாய பகுதிகளில் வாக்காளர் விழிப்புணர்வு மற்றும்  பயிற்றுவித்தல் குழுக்கள் அமைக்கப்படவுள்ளது. இத்திட்டத்தில், முதலாவதாக மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கு, மாநில அளவிலான பயிற்றுநர்கள் மூலமாக ஒரு நாள் பயிற்சி கடந்த 15ம் தேதி நடத்தப்பட்டது. பயிற்சி வகுப்பு முதன்மை தேர்தல் அலுவலகத்தின் இணை முதன்மை தேர்தல் அலுவலர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. பயிற்சி வகுப்பில், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய் கோட்ட அலுவலர்கள், மகளிர் திட்டத்தின் திட்ட இயக்குநர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்கள் என 67 அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் மாணாக்கர்களிடையே வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் பயிற்றுவித்தல், தேர்தல் நடத்துதல் (வாக்கு எண்ணிக்கை உட்பட), வாக்காளர் விழிப்புணர்வுப் பாடல்கள் எழுதி, மெட்டமைத்து பாடுதல் உட்பட்ட பயிற்சிகள் அனைத்து அலுவலர்களுக்கும், ஒவ்வொருவரின் பிரத்யேக பங்களிப்புடன் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் கலந்து கொண்ட மாவட்ட அளவிலான பயிற்றுநர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள நோடல் அலுவலர்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் பயிற்றுவித்தல் தொடர்பான பயிற்சிகளை அளிப்பர். பயிற்சி பெற்ற அலுவலர்கள் மாணவர்களிடையே அமைக்கப்பட்டுள்ள குழுக்களுக்கு தேவையான பயிற்சியினை அளிப்பதோடு மாதந்தோறும் வாக்காளர் விழிப்புணர்வு குழுக்கள் செய்யத்தக்க செயல்பாடுகளை செய்வதற்கு ஊக்குவிப்பராக செயல்படுவர்.இவ்வாறு ராஜாமணி கூறியுள்ளார்.

Related Stories:

>