×

கலந்தாய்வில் காலிப்பணியிடமில்லை ஆசிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்

கோவை, நவ.19: கோவையில் நேற்று நடந்த தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் காலிப்பணியிடங்கள் இல்லாததால் ஆசிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு   டவுன்ஹாலில் உள்ள புனித மைக்கேல் பள்ளியில் நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று பட்டதாரி ஆசிரியர்களுக்கு வருவாய் மாவட்டத்திற்குள்ளான பணி மாறுதல் கலந்தாய்வு நடந்தது. கோவை மாவடத்தில் உள்ள காலிப்பணியிடங்களில் பெரும்பாலனவை பதவி உயர்வு அடிப்படையில் ஏற்கனவே நிரப்பப்பட்டது. வால்பாறை தவிர மற்ற பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு பணிமாறுதல் செய்ய வாய்ப்பில்லாமல் போனது. இதனால் பணியிட மாறுதலுக்காக விண்ணப்பித்து நேற்று நடந்த கலந்தாய்விற்கு வந்த ஆசிரியர்கள் எதிர்பார்த்த இடங்களில் காலிப்பணியிடங்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். வட்டார கல்வி அலுவலர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு இன்று நடக்கிறது.

Tags : Teachers ,consultation ,
× RELATED ஸ்டிரைக்கில் ஆசிரியர்கள் பங்கேற்றால் ஆப்சென்ட் போடப்படும்