×

கத்தி காட்டி வழிப்பறி: 3 பேர் கைது

கோவை, நவ.19: கோவை குறிச்சி பிலால் காலனியை சேர்ந்தவர் முகமது உசேன் (26). பெயிண்டர்.இவர் வேலை முடிந்து சுகுணாபுரம் வழியாக நடந்து சென்ற போது 3 பேர் வழி மறித்து கத்தி காட்டி மிரட்டி செல்போன், பணம் பறித்து தப்பினர். இது தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குனியமுத்தூரை சேர்ந்த நிஷாருதின் (25), பீர்முகமது (41), சூர்யா (21) ஆகியோரை கைது செய்தனர். இதில் நிஷாருதீன் மீது திருட்டு, வழிப்பறி, கொலை வழக்கு இருக்கிறது. கஞ்சா வழக்கில் கைதாகி சிறையில் இருந்து வெளியே வந்த இவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்த பணம் பறித்த போது சிக்கியுள்ளார்.

Tags :
× RELATED திருமங்கலத்தில் மழை: 3 வீடுகள் இடிந்தன