அரசு பேருந்து ஓட்டுநர் காத்திருப்பு போராட்டம்

கோவை, நவ. 19: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை மண்டல அலுவலகத்தில்  ஓட்டுநர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஈரோடு மண்டல கிளை 2ல் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் பாரதிதாசன். இவர் கோவை மண்டல அன்னூர் கிளைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அன்னூர் கிளையில் பணிபுரிய உத்தரவு கடிதம கேட்டு  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை தலைமை அலுவலகத்திற்கு நேற்று வந்தார். உத்தரவு தர கால தாமதம் செய்வதாக கூறி அலுவலகம் உள்ளே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து பாரதிதாசன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘போக்குவரத்து கழகம் கோவை மண்டலத்தில் அலுவலர்கள் கால தாமதம் செய்கின்றனர். அவர்கள் செய்யும் தவறுக்காக நான் பணிக்கு வந்தும் விடுமுறை என்கிற சூழ்நிலை உள்ளது. இதை கண்டித்தும் ஜாய்னிங் ஆர்டரை உடனே தரவேண்டியும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன், ’’ என்றார். அரசு பேருந்து  ஒட்டுநனர் ஒருவர் கோவை மண்டல போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>