×

அறிவுசார் சொத்துரிமை விழிப்புணர்வு முகாம்

கோவை, நவ. 19: இந்திய அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் கிளை எம்.எஸ்.எம்.இ வளர்ச்சி நிலையம், தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம் உடன் இணைந்து வரும் 25ம் தேதி ஒரு நாள் அறிவுசார் சொத்துரிமை விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தவுள்ளது. இந்த கருத்தரங்கில் காப்புரிமைகள், தொழில்துறை வடிவமைப்பு, புவியியல் குறிப்புகள் , வர்த்தக முத்திரைகள், வர்த்தக ரகசியங்கள் மற்றும் பதிப்புரிமை குறித்து விளக்கப்படவுள்ளது.

இந்த கருத்தரங்கில் தொழில் முனைவோர், புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை பதிவு செய்ய விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் வரும் 22ம் தேதிக்கு முன்பாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.  தொடர்புக்கு உதவி இயக்குனர், கிளை எம். எஸ்.எம்.இ வளர்ச்சி நிலையம், பட்டேல் ரோடு, ராம்நகர், கோவை தொலைபேசி எண் - 0422-2233956.  பயிற்சி நடைபெறும் இடம் தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம், 8/4, ரேஸ் கோர்ஸ் ரோடு, தொலைபேசி எண்- 9442241361.

Tags : Intellectual Property Rights Awareness Camp ,
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்