×

உள்ளாட்சி தேர்தல் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர், நவ. 19:  பூந்தமல்லி நகர காங்கிரஸ் கமிட்டியின் ஆலோசனைக்கூட்டம் குமணன்சாவடியில் உள்ள தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்றது.நகர தலைவர் இமயவர்மன் தலைமை தாங்கினார். பொருளாளர் கங்காதரன் வரவேற்றார். இந்தக் கூட்டத்தில் மாவட்ட தலைவர் பூவை பீ. ஜேம்ஸ் வாக்காளர் பட்டியலை காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு வழங்கி, வாக்காளர் சரிபார்க்கும் பணியை தொடங்கி வைத்தும், நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் ஆலோசனை வழங்கினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் தாயுமானவன், எட்வின், காமராஜ், பைசல், தெய்வசிகாமணி, ஜான் தேவசுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : Elections ,Congress Advisory Meeting ,
× RELATED புயல் பாதித்த பகுதிகளை தேர்தல்...